காப்புக் காட்டிற்குள் அத்துமீறி நுழைந்து: நீர்வழிப் பாதையை மாற்ற முயற்சி

ஆம்பூர் அருகே காப்புக் காட்டிற்குள் அத்துமீறி நுழைந்து இயற்கை நீர்வழிப் பாதையை இரு கிராம மக்கள் மாற்ற முயன்றதால் அவர்களுக்கிடையே  பிரச்னை ஏற்பட்டுள்ளது.

ஆம்பூர் அருகே காப்புக் காட்டிற்குள் அத்துமீறி நுழைந்து இயற்கை நீர்வழிப் பாதையை இரு கிராம மக்கள் மாற்ற முயன்றதால் அவர்களுக்கிடையே  பிரச்னை ஏற்பட்டுள்ளது.
ஆம்பூரை அடுத்த காரப்பட்டு காப்புக் காட்டில் மத்தூர் கொல்லை அருகே நந்தி சுனை உள்ளது. இதன் அருகே உள்ள மலைகளில் இருந்து வரும் வெள்ளநீர் மத்தூர் கொல்லை அருகே கானாற்றில் பெருக்கெடுத்து செல்கிறது.
இந்நிலையில் இங்குள்ள ஒரு நீரோடை சந்திப்பில் உள்ள பாறைகளை சிலர் அகற்றி வருவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. மேலும், பாறைகளை அகற்றுவது தொடர்பாக மத்தூர்கொல்லை, காட்டு வெங்கடாபுரம் கிராமத்தினருக்கும், அரங்கல்துருகம், சின்னமலையாம்பட்டு கிராமத்தினருக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளது.
இந்நிலையில் புதன்கிழமை, நீர்வழிப் பாதையில் உள்ள பாறைகளை அகற்றி தங்களுடைய பகுதிக்கு நீர் செல்லும் வகையில் பாதையை மாற்ற முயன்றனர்.
இதில், இரு பிரிவினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாம். இது காப்புக் காட்டிற்குள் அத்துமீறி நுழைந்து இயற்கை நீர்வழிப் பாதையை சேதப்படுத்தும் செயலாகும்.
இதையடுத்து ஆம்பூர் வனவர் அப்பாவு, வன காப்பாளர் சதீஷ் ஆகியோர் அங்கு விரைந்து சென்று, இரு பிரிவினரையும் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை ஆம்பூர் வனச்சரக அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பினரையும் அழைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆம்பூர் வனச்சரக அலுவலர் ஜெயபால் கூறும்போது, காப்புக் காட்டிற்குள் எவரும் நீர்வழிப்பாதையை திருப்பிவிடவில்லை. அவ்வாறு நடந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com