அம்மன் கோயில்களில் ஆடித் திருவிழா

அரக்கோணம் பழைய பஜார் தெருவில் உள்ள பெரியபாளையத்தம்மன் கோயிலில் ஆடித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரக்கோணம் பழைய பஜார் தெருவில் உள்ள பெரியபாளையத்தம்மன் கோயிலில் ஆடித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரக்கோணம் சலவைத்  தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 5-ஆம் வார வெள்ளிக்கிழமை ஆடித் திருவிழா  நடைபெறுவது வழக்கம். இதேபோல இந்த ஆண்டும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலை சிறப்பு புஷ்ப அலங்கார தீப ஆராதனை நடைபெற்றது.
இதில், அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி மற்றும் வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ஏ.ஜி.விஜயன், நகர அதிமுக இளைஞரணிச் செயலாளர் பாண்டுரங்கன், சலவை தொழிலாளர் சங்கத் தலைவர் கே.ஜனா, சங்க நிர்வாகி சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காளியம்மனுக்கு புஷ்ப அலங்காரம்
வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இந்த அலங்காரத்தில் சம்பங்கி, ரோஜா, முல்லை, சாமந்தி உள்ளிட்ட பல்வேறு ரக பூக்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக் குழுத் தலைவர் ப.மச்சேந்திரன், கோயில் நிர்வாகி சிவா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com