காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம்

குடியாத்தம் நடுப்பேட்டை காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. 

குடியாத்தம் நடுப்பேட்டை காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
இதையொட்டி, அதிகாலை பிரம்ம முகூர்த்தம், கணபதி பிரார்த்தனை, 4-ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து ஸ்தூபிகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, மகா தீபாராதனையும், அன்னதானமும் வழங்கப்பட்டன. மாலை சுவாமி வீதி உலா நடைபெற்றது. 
இதில் மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். 
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக் குழு நிர்வாகிகள் எம்.வி. சங்கரதேசிகன், கே.எம்.ஜி. ராஜேந்திரன், எம்.ஏ. சிவகுமாரன், பி.என்.எஸ். திருநாவுக்கரசு, ஜே.கே.என். பழனி, கே.எம். பூபதி, எஸ். அருணோதயம், எம்.என். ஜோதிகுமார்,  முன்னாள் மாவட்ட அதிமுக செயலாளர் வி. ராமு, நகர கூட்டுறவு வங்கித் தலைவர் எம். பாஸ்கர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com