ஊருக்குள் ஆறாக ஓடும் ஏரி நீர்...!

ஆம்பூர் அருகே ஏரி நிரம்பி தெருக்களில் தண்ணீர் ஆறாக ஓடுகிறது.

ஆம்பூர் அருகே ஏரி நிரம்பி தெருக்களில் தண்ணீர் ஆறாக ஓடுகிறது.
ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் சுமார் 200 ஏக்கர் பரப்பில் பெரிய ஏரி, சின்ன ஏரி என 2 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளுக்கு ஆந்திரம், தமிழக வனப் பகுதிகளில் பெய்யும் மழையால் பொன்னப்பல்லி கானாறு, அரங்கல்துருகம் கானாறு, ராள்ளக்கொத்தூர் கானாறுகளின் மூலம் தண்ணீர் வருகிறது. 
இக்கானாறுகளில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.
 ஏரி நீர் வெளியேறி செல்லும் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாலும், தூர்ந்து போயுள்ளதாலும் வெங்கடசமுத்திரம், துத்திப்பட்டு, பெரியவரிகம் ஊராட்சிகளில் உள்ள பெரும்பாலான பகுதிகளிலும், தோல் மற்றும் காலணி தொழிற்சாலைகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.
இதை வெளியேற்ற ஆம்பூர்-வெங்கடசமுத்திரம் சாலை அண்மையில் துண்டிக்கப்பட்டு தண்ணீர் திருப்பி விடப்பட்டது. அவ்வாறு திருப்பி விடப்பட்ட தண்ணீர் அருகே உள்ள துத்திப்பட்டு, பெரியவரிகம் ஊராட்சிகளின் பெரும்பாலான  தெருக்களில் ஆறாக ஓடுகிறது. குடியிருப்புகளை ஒட்டி தண்ணீர் தேங்கியுள்ளதால்,  கொசு உற்பத்தியாகும் சூழ்நிலை நிலவுகிறது.
மேலும், தெருக்களிலும், சாலைகளிலும் நடந்து செல்ல முடியாத அளவுக்கு தண்ணீர் செல்கிறது.  இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.  
எனவே, உடனடியாக ஏரி தண்ணீரை கால்வாய் வழியாக திருப்பிவிட்டு, குடியிருப்புப் பகுதிகள் பாதிப்பு அடையாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com