தூர்வாரப்பட்ட நீர்நிலைகளை  பார்வையிட்ட வாழும் கலை அமைப்பினர்

ஆம்பூர் அருகே தூர்வாரப்பட்ட பிறகு நீர் நிரம்பியுள்ள நீர்நிலைகளை வாழும் கலை அமைப்பினர் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டனர்.

ஆம்பூர் அருகே தூர்வாரப்பட்ட பிறகு நீர் நிரம்பியுள்ள நீர்நிலைகளை வாழும் கலை அமைப்பினர் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டனர்.
ஆம்பூர் அருகே வனப்பகுதிகளில்  கோடை காலத்தில் வறட்சி ஏற்பட்டு வன விலங்குகள் காட்டை விட்டு வெளியேறின. இதையடுத்து வாழும்கலை அமைப்பு சார்பில் மிட்டாளம் ஊராட்சி, பைரப்பல்லி கிராமம் அருகே ரெங்கையன் கிணறு, மாடு ஊட்டல் பகுதியில் நீர் நிலைகள் தூர்வாரப்பட்டன.  அப்பணியை ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் காட்டிற்குள் 5 கி.மீ. தூரம் நடந்து சென்று தொடங்கி வைத்தார். 
ஊட்டல் காப்புக் காட்டில் உள்ள ரெங்கையன் கிணறு, மாடு ஊட்டல் ஆகிய பகுதிகளில் தூர்வாரப்பட்ட பிறகு அண்மையில் பெய்த பருவ மழையால் அந்த நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. உபரி தண்ணீர் கானாறுகளின் வழியாகச் செல்கிறது. 
வாழும் கலை அமைப்பு சார்பாக அண்மையில் நதிகள் புனரமைப்பு மாநாடு பெங்களூருவில் உள்ள பன்னாட்டு மையத்தில் நடைபெற்றது. அதில் வேலூர் மாவட்டத்தில் நதிகளை புனரமைப்பது என எடுக்கப்பட்ட முடிவின்படி வேலூர் மாவட்டத்தில் நதிகள் புனரமைக்க வாழும் கலை அமைப்பு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக ஏற்கெனவே வாழும் கலை அமைப்பால் தூர்வாரப்பட்ட நீர்நிலைகளின் தற்போதைய நிலைமை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. தூர்வாரப்பட்ட பிறகு தண்ணீர் நிரம்பியுள்ள நீர்நிலைகளை வாழும்கலை அமைப்பின் நதிகள் புனரமைப்புத்  திட்ட தமிழ்நாடு ஒருங்கிணைபாளர் மற்றும் நாகநதி புனரமைப்புத் குழு ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், நிர்வாகி பாஸ்கர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.  
அப்போது நீர்நிலை ஆர்வலர்கள் மனோகரன் மன்றாடியார், கௌதம பாண்டியன், சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com