'உரிமம் பெறாவிட்டால் 'சீல்' வைப்போம் என அதிகாரிகள் அச்சுறுத்தக் கூடாது'

உணவு வணிகர்கள் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் பதிவு மற்றும் உரிமச் சான்றிதழ் பெறாவிட்டால் கடைகளுக்கு 'சீல்' வைப்போம் என அதிகாரிகள் அச்சுறுத்தக் கூடாது என வேலூர் வணிகர் சங்கங்கள் பேரமைப்பு சார்பில்

உணவு வணிகர்கள் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் பதிவு மற்றும் உரிமச் சான்றிதழ் பெறாவிட்டால் கடைகளுக்கு 'சீல்' வைப்போம் என அதிகாரிகள் அச்சுறுத்தக் கூடாது என வேலூர் வணிகர் சங்கங்கள் பேரமைப்பு சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வேலூர் சண்முகனடியார் சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, பேரமைப்பின் வேலூர் மாவட்டச் செயலாளர் ஞானவேலு தலைமை வகித்தார். மாநில இணைச் செயலாளர் குமார், மாவட்டத் துணைத் தலைவர் பாலு, வேலூர் அனைத்து வணிகர்கள் சங்கச் செயலாளர் பாபு அசோகன், பொருளாளர் அருண்பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்: உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் கீழ் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் உணவு வணிகர்கள் பதிவு மற்றும் உரிமச் சான்றிதழ் பெற வேண்டும். இல்லையெனில் கடைகளுக்கு 'சீல்' வைப்போம் என அதிகாரிகள் அச்சுறுத்துகின்றனர். வணிகர்களை அச்சுறுத்துவதை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்.
வணிகர்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். அனைவரும் பதிவு மற்றும் உரிமச் சான்றிதழ் பெறுவதற்கான முயற்சி எடுத்து வருகின்றனர். குறைந்த கால அவகாசம் இருப்பதால் விரைந்து முடிவெடுக்க முடியாத நிலை உள்ளது. எனவே, சீல் வைக்கும் முடிவை அதிகாரிகள் தள்ளி வைக்க வேண்டும். மேலும், பதிவு மற்றும்
உரிமச் சான்றிதழ் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆண்டு விற்பனை உச்சவரம்பு ரூ. 12 லட்சத்தில் இருந்து ரூ. 25 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com