பன்றிக் காய்ச்சலுக்கான மருந்து மாத்திரைகள் கையிருப்பில் உள்ளன: சுகாதாரத் துறை அமைச்சர்

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
பன்றிக் காய்ச்சலுக்கான மருந்து மாத்திரைகள் கையிருப்பில் உள்ளன: சுகாதாரத் துறை அமைச்சர்

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது: பன்றிக் காய்ச்சல் என்பது பருவ காலங்களில் ஏற்படும் ஒரு விதமான காய்ச்சல் என உலக சுகாதார அமைப்பு கூறியிருப்பதால், இதுகுறித்து மக்கள் பீதியடையத் தேவையில்லை. கை கழுவும் பழக்கத்தை முறையாகக் கடைபிடித்தாலே 80 சதவீத பாதிப்பை தடுக்க முடியும்.
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த தேவையான 14 லட்சம் டாமிபுளூ மாத்திரைகள், 21,567 டாமிபுளூ சிரப், 60,461 மருத்துவ பாதுகாப்பு கவசங்கள், 33,819 பாதுகாப்பு முக கவசங்கள், 11,72,990 மூன்று அடுக்கு முக கவசங்கள் கையிருப்பில் உள்ளன. தனியார் மருத்துவமனைகள் பன்றிக் காய்ச்சல் அறிகுறி தென்பட்டால், உரிய வழிகாட்டுதலில் தெரிவித்துள்ள வகையில் மட்டுமே பரிசோதனை, சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தேவையான டாமிபுளூ மாத்திரைகள் மாவட்ட பொது சுகாதாரத் துறை மூலம் இலவசமாக வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பன்றிக் காய்ச்சல் நோயைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காய்ச்சல் தொடர்பாக 24 மணிநேரம் மருத்துவ ஆலோசனைகள் பெரும் வகையில் தகவல் மையத்தில்  (044-24350496, 24334811, 94443-40496, 93614-82899) ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com