நாக்கு ஒட்டிய 12 சிறுவர்களுக்கு அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை

வாலாஜா அரசு மருத்துவமனையில், நாக்கு ஒட்டிய 12 சிறுவர்களுக்கு சனிக்கிழமை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

வாலாஜா அரசு மருத்துவமனையில், நாக்கு ஒட்டிய 12 சிறுவர்களுக்கு சனிக்கிழமை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
வாலாஜாபேட்டையில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு அவ்வப்போது மருத்துவ முகாம் நடத்தப்பட்டு அதன் மூலம் சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. கடந்த மாதம் நடைபெற்ற முகாமில் பரிசோதனை செய்ததில் பல சிறுவர்களுக்கு நாக்கு ஒட்டி இருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
மருத்துவமனைக் கண்காணிப்பாளர் மருத்துவர் யாஸ்மின் தலைமையில் மருத்துவர் அச்சுதன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் சனிக்கிழமை ஒரே நாளில் 12 சிறுவர்களுக்கு அறுவைச் சிகிச்சை மூலம் ஒட்டிய நாக்கை பிரித்தனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவித்ததாவது: இந்த நாக்கு ஒட்டிய குறைபாட்டினால் இனி தெளிவாகப் பேச இயலாமல் உணவு உண்ணும் போது பலவித சிரமங்கள் ஏற்படும். இந்த அறுவைச் சிகிச்சை மூலம் அவர்கள் தெளிவாகப் பேசவும், அனைத்து உணவுகளையும் எளிதாக உண்ணவும் முடியும் என்றனர். அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 12 சிறுவர்களுக்கு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com