உதவித்தொகை: தலைமை ஆசிரியரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

அரக்கோணம் அரசினர் ஆதிதிராவிட நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 முடித்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் உதவித்தொகையை

அரக்கோணம் அரசினர் ஆதிதிராவிட நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 முடித்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் உதவித்தொகையை இதுவரை பெற்றுத் தராத பள்ளியின் அப்போதைய தலைமை ஆசிரியரை கண்டித்து முன்னாள் மாணவர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடந்த 2015-16-இல் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய உதவித்தொகை இதுவரை மாணவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்கின்றனர். ஆனால் இதே பகுதியில் உள்ள மற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு  உதவித்தொகை அதே ஆண்டில் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில் 2 ஆண்டிகள் கடந்தும் தங்களுக்கு உதவித்தொகை பெற்றுத்தராத அப்போதைய தலைமை ஆசிரியர் முகமது யூனுஸை கண்டித்து, முன்னாள் மாணவர்கள் பள்ளியின் நுழைவு வாயிலில்  திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து, தற்போதைய தலைமை ஆசிரியர் ஜி.விஸ்வநாதன் கூறுகையில், "இந்த விவகாரம் தொடர்பாக மேல் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com