குழந்தைத் தொழிலாளர்கள் 610 பேர் மீட்பு

வேலூர் மாவட்டத்தில் 2017-18ஆம் ஆண்டில் படிப்பை பாதியில் நிறுத்தியிருந்த குழந்தைத் தொழிலாளர்கள் 610 பேர் மீட்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர் மாவட்டத்தில் 2017-18ஆம் ஆண்டில் படிப்பை பாதியில் நிறுத்தியிருந்த குழந்தைத் தொழிலாளர்கள் 610 பேர் மீட்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வித் திட்ட அலுவலர்கள், குழந்தைத் தொழிலாளர் சிறப்பு ஆசிரியர்களால் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் படிப்பை பாதியில் நிறுத்திய குழந்தைத் தொழிலாளர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. இந்தக் குழந்தைகள் மீட்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள 39 சிறப்பு பயிற்சி மையங்களில் 8ஆம் வகுப்பு வரை பயில நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன்படி கடந்த ஏப்ரல், மே  மாதங்களில் நடத்தப்பட்ட ஆய்வின்போது 334 சிறுவர்கள், 276 சிறுமிகள் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டதோடு, சிறப்பு பயிற்சி மையத்தில் கல்வி பயில சேர்க்கப்பட்டனர்.  கடந்த 2016-17ஆம் ஆண்டில் 230 சிறுவர்கள், 249 சிறுமிகள் என 479 பேர் மீட்கப்பட்டு சிறப்பு பயிற்சி மையத்தில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com