குவைத்தில் தவிக்கும் பெண்ணை மீட்கக் கோரி ஆட்சியரிடம் மனு

குவைத் நாட்டில் சிக்கித் தவிக்கும் பெண்ணை மீட்கக் கோரி, அவரது உறவினர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமனிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

குவைத் நாட்டில் சிக்கித் தவிக்கும் பெண்ணை மீட்கக் கோரி, அவரது உறவினர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமனிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்
கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமை வகித்தார். இதில், ஆலங்காயம் அருகே உள்ள படகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராமன் மகன் வெங்கடேசன், ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
 எனது தங்கை சுமதி (33),  கடந்த இரண்டு ஆண்டுகளாக குவைத்தில் வீட்டு வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 13}ஆம் தேதி தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர்,  அங்கு தனக்கு சரியாக உணவு வழங்காமல், வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக
தெரிவித்தார்.
அதன்பிறகு சுமதியை தொடர்பு கொள்ள முடியவில்லை.  எனவே, எனது சகோதரியை உடனடியாக மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல்,  வாலாஜாபேட்டை வட்டத்துக்கு உள்பட்ட புளியங்கண்ணு கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினருக்கு ஜாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி 50}க்கும் மேற்பட்ட மாணவர்கள் மனு அளித்தனர்.
இதுதவிர,  பட்டா மாறுதல்,  முதியோர் உதவித்தொகை,  கடனுதவி  உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 591 மனுக்கள் அளிக்கப்பட்டன.
 அவற்றின் மீது நடவடிக்கைக்கு எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்
களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் அலுவலர் வேணுசேகரன், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் மணிவண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து
கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com