டயாலிசிஸ் மையம் திறப்பு

வேலூர் சத்துவாச்சாரியில் ரூ.1.50 கோடியில் டயாலிசிஸ் மையம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

வேலூர் சத்துவாச்சாரியில் ரூ.1.50 கோடியில் டயாலிசிஸ் மையம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
 வேலூர் கோட்டை ரோட்டரி சங்கம், ரோட்டரி சாரிட்டபிள் டிரஸ்ட்,   ' ரோட்டா போர்ட் அலைட் ஹெல்த் மையம் ' ,
 தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி மையம் (டேங்கர் பவுண்டேசன்) ஆகியவை சார்பில் பச்சையம்மாள், சண்முகம் ரோட்டா போர்ட் டேங்கர் டயாலிசிஸ் மையத்தை  ரோட்டரி முன்னாள் மாவட்ட ஆளுநர் ராஜூ திறந்து வைத்தார்.
 விழாவில், எம்எல்ஏ பா.கார்த்திகேயன்  சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். டேங்கர் பவுண்டேசன் நிறுவனர் ஜார்ஜ் ஆபிரகாம், நிர்வாக அறங்காவலர் லதா குமாரசாமி, ரோட்டரி சங்கத் தலைவர் தாமோதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 இந்த மையத்தில் 12 டயாலிசிஸ் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு ரூ.375 கட்டணத்திலும், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவசமாகவும் டயாலிசிஸ் செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com