இரு தரப்பினரிடையே மோதல்: 13 பேர் கைது; போலீஸ் குவிப்பு

காட்பாடி அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக 13 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

காட்பாடி அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக 13 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். இதில், சாமி சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடு
பட்டுள்ளனர்.
வேலூரை அடுத்த விருதம்பட்டு களத்துமேடு பகுதியைச் சேர்ந்த யுவராஜ். இவர், அருகே ஜாகீர் உசேன் தெருவில் வசிக்கும்  மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவரை முன்விரோதம் காரணமாக கடந்த 25}ஆம் தேதி தாக்கினாராம். இதையடுத்து இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதையடுத்து ஊர் முக்கியதஸ்தர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இந்நிலையில், ஜாகீர் உசேன் தெருவைச் சேர்ந்த சிலர் பைக்கில் களத்துமேடு பகுதி வழியாக திங்கள்கிழமை சென்றனர். அவர்களை களத்துமேடு பகுதியைச் சேர்ந்த சிலர் வழிமறித்து தாக்கியதோடு, ஜாகீர் உசேன் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கையும் சேதப்படுத்தினராம். மேலும், ரம்ஜான் பண்டிகைக்காக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டியூப் லைட்டுகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஜாகீர் உசேன் தெருவைச் சேர்ந்த 50}க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை இரவு களத்து மேடு பகுதிக்குச் சென்று இரு கார், குடிநீர்த் தொட்டி ஆகியவற்றை சேதப்படுத்தியதோடு, கோயிலில் இருந்த சாமி சிலையையும் சேதப்படுத்தினராம். மேலும் வீடுகளுக்குள் கற்களை வீசிச் சென்றனர்.
தகவலறிந்த காட்பாடி காவல் துணைக் கண்காணிப்பாளர் மாணிக்கவேலு தலைமையிலான போலீஸார் அங்கு சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக விருதம்பட்டு போலீஸில் இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் செல்வம் (31),  பிரதாப் (27),  வெங்கடேசன் (24),  கார்த்தி (31), நவீன் (22),  ஜெகன் (43),  ஏழுமலை (34), உள்ளிட்ட13 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், 4 பேரை தேடி வருகின்றனர்.
இதற்கிடையில், சாமி சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி களத்துமேட்டு பகுதியினர், இந்து முன்னணியினர் சுமார் 100}க்கும் மேற்பட்டோர் விருதம்பட்டு காவல் நிலையத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com