விளையாட்டு விடுதிகளில்  மாணவர் சேர்க்கைக்கு ஏப்.20-க்குள் விண்ணப்பிக்கலாம்

விளையாட்டு விடுதிகளில் சேர்க்கைக்காக மாவட்ட அளவில் நடைபெறவுள்ள தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விளையாட்டு விடுதிகளில் சேர்க்கைக்காக மாவட்ட அளவில் நடைபெறவுள்ள தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர், விளையாட்டுத் துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏதுவாக நல்ல பயிற்சி, உணவுடன் கூடிய தங்குமிட விளையாட்டு விடுதிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி, நாமக்கல்லில் மாணவர்களுக்கும், ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி, சென்னை ஆகிய இடங்களில் மாணவியருக்கான விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த விடுதிகளில் உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்காக 7,8,9, பிளஸ் 1 வகுப்பு பயிலும் மாணவர் சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வு வருகிற மே 2-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியர் அதற்கான உரிய விண்ணப்பங்களை நேதாஜி விளையாட்டரங்கில் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
2017-18-ஆம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய, விளையாட்டு விடுதி குறித்த விவரங்களை w‌w‌w.‌s‌d​a‌t.‌t‌n.‌g‌o‌v.‌i‌n​ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் வருகிற ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com