பெண் தொழிலாளி மீது தாக்குதல்: தனியார் தொழிற்சாலையை முற்றுகையிட்ட பொதுமக்கள்

ராணிப்பேட்டை அருகே பெண் தொழிலாளியை தாக்கிய மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தனியார் காலணி தொழிற்சாலையை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை அருகே பெண் தொழிலாளியை தாக்கிய மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தனியார் காலணி தொழிற்சாலையை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 ராணிப்பேட்டை அருகே மாந்தாங்கல் கிராமத்தில் தனியார் காலணி தொழிற்சாலை உள்ளது. இங்கு ஜான்சன் (45) என்பவர் மேற்பார்வையாளராக உள்ளார். இந்நிலையில் தொழிற்சாலையில் பணிபுரியும் இளம்பெண் தொழிலாளிக்கும், மேற்பார்வையாளர் ஜான்சனுக்கும் பணியின்போது வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த ஜான்சன் இளம்பெண்ணின் கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது.
 இதுகுறித்து தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலையை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த ராணிப்பேட்டை போலீஸார் அவர்களை கலைந்து செல்லும்படி எச்சரித்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
 இதைத் தொடர்ந்து பொதுமக்களை சமரசம் செய்த போலீஸார், ஜான்சனை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com