போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது

அழிஞ்சிகுப்பம் கிராமத்தில் வட்டாட்சியர் ஜீப் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த வழக்கில் 12 பேரை மேல்பட்டி போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

அழிஞ்சிகுப்பம் கிராமத்தில் வட்டாட்சியர் ஜீப் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த வழக்கில் 12 பேரை மேல்பட்டி போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
அழிஞ்சிகுப்பத்தில் இயங்கி வரும் 2 டாஸ்மாக் கடைகளை அகற்றகோரி, வெள்ளிக்கிழமை அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். மேலும் டாஸ்மாக் கடையின் முன்பக்க கூரையை பிரித்து எறிந்தனர். அப்போது பொதுமக்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து போலீஸார் கூட்டத்தை கட்டுப்படுத்த தடியடி நடத்தினர். பெண்களையும் விரட்டியடித்தனர். இந்த போராட்டத்தின் போது, பேர்ணாம்பட்டு வட்டாட்சியரின் ஜீப் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது.
இதுதொடர்பாக மேல்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து அழிஞ்சிகுப்பத்தைச் சேர்ந்த நீலகண்டன் (64), பூபதி (19), ஜேக்கப் (37), பட்டாபிராமன் (56), உதயசங்கர் (40), முத்துராமன் (54), ராஜக்கல் கிராமத்தைச் சேர்ந்த பிரகாசம் (47), பன்னீர்செல்வம் (37), வெங்கடேசன் (36), சிவகுமார் (36), மேல்கொத்தகுப்பம் சரத்பாபு (27), விண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பிரேம் காந்தி (27) ஆகிய 12 பேரை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com