அம்மூர் கோயிலில் அர்ச்சுனன் தபசு

ராணிப்பேட்டையை அடுத்த அம்மூர் திரெளபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழாவையொட்டி அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டையை அடுத்த அம்மூர் திரெளபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழாவையொட்டி அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த மாதம் 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அர்ச்சுனன் தபசு மரம் ஏறுதல் நிகழ்ச்சி திங்கள்கிழமை காலை நடைபெற்றது. இதில், சிவனிடம் பாசுபதாஸ்திரம் வேண்டி, கோயில் முன்னால் நடப்பட்ட மரத்தின் உச்சியில் அர்ச்சுனன் ஒற்றைக் காலில் நின்று சிவனை நினைத்து பாடி, வில்வ இலைகளையும், எலுமிச்சை பழங்களையும் கீழே வீசும் நிகழ்ச்சி நடைபெற்றது. வீசிய வில்வ இலைகள், எலுமிச்சை பழங்களை குழந்தை பேறு இல்லாத பெண்கள் பெற்றுச் சென்றனர். நிகழ்ச்சியில், அம்மூர், சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர்.
தொடர்ந்து, வரும் 26-ஆம் தேதி கர்ண மோட்சம், 27-ஆம் தேதி பதினெட்டாம் போர் நாடகம் நடைபெறுகிறது. பின்னர் 28-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை துரியோதனன் படுகளமும், மாலை தீமிதி விழாவும் நடைபெறுகின்றன. 29-ஆம் தேதி தர்மர் பட்டாபிஷேக நிகழ்ச்சியுடன் அக்னி வசந்த விழா நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com