பள்ளிகொண்டா பகுதியில் கன மழை : உத்திர ரங்கநாதர் கோயில் கொடிமரம் சாய்ந்தது

பள்ளிகொண்டா பகுதியில் திங்கள்கிழமை இரவு சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழையில் உத்திர ரங்கநாதர் கோயில் கொடிமரம் சாய்ந்து கீழே விழுந்தது.

பள்ளிகொண்டா பகுதியில் திங்கள்கிழமை இரவு சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழையில் உத்திர ரங்கநாதர் கோயில் கொடிமரம் சாய்ந்து கீழே விழுந்தது.
பள்ளிகொண்டா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை இரவு திடீரென தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரம் இடைவிடாமல் பெய்தது. சூறாவளி காற்று மற்றும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சூறாவளி காற்றில் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயில் கொடிமரம் சாய்ந்து கீழே விழுந்தது. கோயில் கொடிமரம் சாய்ந்தது குறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோயில் கொடிமரம் கீழே சாய்ந்ததால் அதற்கு பரிகார பூஜை செய்வது குறித்தும், கோயில் கொடிமரம் பிரதிஷ்டை செய்வது குறித்தும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையால் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கியது. சரியான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் மழை காலங்களில் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் தண்ணீர் தேங்குவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படு
கிறது. திங்கள்கிழமை பெய்த கனமழையால் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கியது.
இதனால் பள்ளிகொண்டா பேரூராட்சி பகுதி மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமலும், குடியாத்தம் நகருக்கு செல்லும் வாகனங்களும், அவ்வழியாக செல்ல முடியாமல் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயின. மழை பெய்து நின்ற பிறகு சுமார் அரை மணி நேரம் கழித்த பிறகே ஓரளவுக்கு மழைநீர் வடிந்தது.
தேசிய நெடுஞ்சாலையோரம் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டுமென பள்ளிகொண்டா பேரூராட்சி பகுதி மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com