மரங்களை அழிப்பதால் மழை வளம் குறைகிறது: திருவாவடுதுறை ஆதீனம்

மரங்கள் அழிக்கப்பட்டு வருவதால் மழை குறைந்து வறட்சி ஏற்பட்டுள்ளது என திருவாவடுதுறை 24-வது ஆதீனம் கூறினார்.

மரங்கள் அழிக்கப்பட்டு வருவதால் மழை குறைந்து வறட்சி ஏற்பட்டுள்ளது என திருவாவடுதுறை 24-வது ஆதீனம் கூறினார்.
திருவாவடுதுறை ஆதீனம் சைவத் திருமுறை ராணிப்பேட்டை பயிற்சி மையத்தின் சார்பில், தமிழகத்திலேயே முதன் முறையாக சுந்தரர் தேவாரம் தமிழிசை விழாவில் 7-ஆம் திருமுறை முற்றோதல் பயிற்சி ராணிப்பேட்டை காரை கூட்டுச் சாலையில் உள்ள அரசு சிறுவர்களுக்கான குழந்தைகள் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 15-க்கும் மேற்பட்ட ஓதுவா மூர்த்திகள் பங்கேற்று சுந்தரர் தேவாரம் 100 பாடல்களை பண்ணுடன் பாடினர்.
விழாவில் வருகை தந்த திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று பேசியதாவது:
தற்போது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களின் நிலையற்ற தன்மையாலும், பூகம்பம், மழையின்மை, புயல் உள்ளிட்ட பேரழிவுகளாலும் உலக உயிர்கள் அனைத்தும் நிம்மதியின்றி வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. நம் முன்னோர்கள் ஆலயங்களைச் சுற்றி தல விருட்சங்களாக மரங்கள் வளர்த்து, அந்த மரங்களை கடவுளாக வழிபட்டதாலேயே மழை பெய்து வளம் செழித்தது. தற்போது மரங்கள் அழிக்கப்பட்டு வருவதால் மழை குறைந்து வறட்சி ஏற்பட்டுள்ளது. இது போன்ற அழிவுகளில் இருந்து விடுபட்டு நிம்மதியாக வாழ திருமுறையை பொருள் உணர்ந்து இசையோடு பாட வேண்டும், இறைவனை வழிபட்டு வர வேண்டும் என்றார்.
விழாவில் சிதம்பரம் ஓதுவாமூர்த்தி குழுவினர் பன்னிருவர் சிவகுமார், ராணிப்பேட்டை பயிற்சி மைய அமைப்பாளர் இரா.ரகுபதி மற்றும் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 2 ஆயிரம் சிவனடியார்கள் பங்கேற்று 7-ஆம் திருமுறை முற்றோதல் பயிற்சி பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com