தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது நூலிழையில் உயிர் தப்பிய மாணவி

வாணியம்பாடி அருகே சைக்கிளுடன் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மாணவி ரயில் விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பினார். ரயில் மோதியதால் சைக்கிள் உருக்குலைந்தது.

வாணியம்பாடி அருகே சைக்கிளுடன் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மாணவி ரயில் விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பினார். ரயில் மோதியதால் சைக்கிள் உருக்குலைந்தது.
வாணியம்பாடியை அடுத்த நெக்குந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமாறனின் மகள் வர்ஷா (13). இவர், வாணியம்பாடியில் உள்ள அரசு நிதியுதவி உதவி பெறும் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 8.40 மணியளவில் வழக்கம் போல சைக்கிளில் பள்ளிக்குப் புறப்பட்டார். புதூர் ரயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது, சைக்கிள் தண்டவாளத்தில் தவறி விழுந்தது. இதை எடுக்க மாணவி முயன்று கொண்டிருந்தார்.
அப்போது சென்னையில் இருந்து மைசூர் நோக்கிச் செல்லும் சதாப்தி விரைவு ரயில் எதிரே வேகமாக வந்துள்ளது. இதைப் பார்த்த அருகே இருந்த மக்கள் விரைந்து வந்து மாணவியை குண்டுகட்டாக தூக்கி காப்பாற்றினர். சைக்கிள் மற்றும் பாடபுத்தகப் பை ரயில் என்ஜினில் சிக்கின. இதில், சைக்கிள் சின்னாபின்னமானது.
இதையடுத்து ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தி சேதமடைந்த சைக்கிளை மீட்டனர். பின்னர், அந்த ரயில் சுமார் 15 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. இதுகுறித்து வாணியம்பாடி ரயில் நிலைய மேலாளர் மற்றும் ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com