பாலாற்றைக் கடக்க பொதுமக்களே அமைத்த பாலம்

ஆம்பூரில் பாலாற்றைக் கடக்க பொதுமக்களே தாற்காலிக பாலத்தை அமைத்தனர்.

ஆம்பூரில் பாலாற்றைக் கடக்க பொதுமக்களே தாற்காலிக பாலத்தை அமைத்தனர்.
ஆம்பூர் நகரில் பாலாற்றங்கரையோரப் பகுதியில் குடியிருப்புகள் உள்ளன. இதில், ஆம்பூர் மளிகை தோப்பு, சுண்ணாம்பு காளவாய் உள்ளிட்ட பகுதியில் வசிப்பவர்கள் துத்திப்பட்டு, எல்.மாங்குப்பம், சின்னவரிக்கம், பெரியவரிக்கம், உமர்ஆபாத் தொடங்கி பேர்ணாம்பட்டு வரை உள்ள பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர்.
இப்பகுதியில் பாலாற்றில் வெள்ளம் வருவதற்கு முன் இருந்த மண் பாதையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், வெள்ளநீர் தடையின்றி செல்ல மளிகை தோப்பு பகுதியில் பாலாற்றின் குறுக்கே இருந்த தார் சாலை பொக்லைன் இயந்திரம் மூலம் வெட்டி அகற்றப்பட்டது. இதேபோல, சுண்ணாம்பு காளவாய் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மண் சாலையும் துண்டிக்கப்பட்டு வெள்ளநீர் செல்வதற்கு வழி செய்யப்பட்டது.
இதையடுத்து பொதுமக்கள் ஆம்பூர் ஓ.வி. சாலை-எல்.மாங்குப்பம் கிராமத்தை இணைக்கும் தரைப் பாலத்தையும், ஆம்பூர் புறவழிச் சாலை-தேவலாபுரம் கிராமத்தை இணைக்கும் பாலாற்று மேம்பாலத்தையும் பயன்படுத்தி வந்தனர். இதனால் காலதாமதம் ஏற்பட்டு வந்ததது.
தற்போது பாலாற்றில் வெள்ளம் குறைந்த நிலையில் அப்பகுதி மக்கள் ஒன்று கூடி தாற்காலிக பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் இருந்த சிமென்ட் குழாய்களைப் பயன்படுத்தி, அதன் மீது மணல் மூட்டைகளை அடுக்கினர். பின்னர், மண் மற்றும் கட்டட இடிபாடுகளை அதன் மீது போட்டு பாதை ஏற்படுத்தினர். மேலும், இரு சக்கர வாகனத்தில் செல்ல ஏதுவாகவும் தாற்காலிக பாலத்தை அமைத்தனர்.
இப்பகுதியில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com