"உலகளவில் நீரிழிவு நோய் பாதிப்பில்  2-ஆம் இடத்தில் இந்தியா'

உலகளவில் நீரிழிவு நோய் பாதிப்பில் இந்தியா 2-ஆம் இடத்தில் இருப்பதாகவும், உணவுப் பழக்கத்தை முறையாகக் கடைப்பிடித்தால் நோயில் இருந்து

உலகளவில் நீரிழிவு நோய் பாதிப்பில் இந்தியா 2-ஆம் இடத்தில் இருப்பதாகவும், உணவுப் பழக்கத்தை முறையாகக் கடைப்பிடித்தால் நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, வேலூர் சிஎம்சி மருத்துவமனை வளாகத்தில் நீரிழிவு நோய் குறித்த கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் நீரிழிவு, பல், சிறுநீரகம், எலும்பு, ரத்தம், நுரையீரல் உள்ளிட்ட 17 துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை சிஎம்சி இணை இயக்குநர் விக்ரம் மேத்யூ திறந்து வைத்தார்.  
இதைத் தொடர்ந்து, சிஎம்சி மருத்துவர்கள் கூறியதாவது:
உலகளவில் நீரிழிவு நோய் பாதிப்பில் சீனா முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் மக்கள் தொகையில் 98.4 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இரண்டாமிடத்தில் உள்ள இந்தியாவில் 65.1 மில்லியன் மக்களும், மூன்றாமிடத்தில் உள்ள அமெரிக்காவில் 24.4 மில்லியன் மக்களும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். நீரிழிவு நோய் பாதிப்புக்குள்ளாகுவோரின் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும் என்பதால் உணவுப் பழக்க வழக்கங்களை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக, அன்றாட உணவில் காய்கறிகள் அதிகம் சேர்த்துக் கொள்வதோடு, பழங்களும் சாப்பிட வேண்டும்.
நீரிழிவு நோய் தாக்கினால் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இக்கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில், பங்கேற்பவர்களுக்கு இலவசமாக ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்படுகிறது என்றனர்.
சிஎம்சி மருத்துவர் நிகல் தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை சிஎம்சி மருத்துவமனை ஊழியர்கள் சுனிதா ராமன், நிர்மலா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com