காட்பாடி ரயில்வே பாலத்தை சீரமைக்க வேண்டும்: துரைமுருகன்

காட்பாடியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்தார்.

காட்பாடியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்தார்.
காட்பாடியில் ரயில்வே மேம்பாலத்தை செவ்வாய்க்கிழமை பார்வையிட்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட காட்பாடி ரயில்வே பாலம், திமுக ஆட்சியின் போது பெரிய பாலமாக மாற்றப்பட்டது. தமிழக, ஆந்திர மாநிலத்தை இணைக்கும் வகையில் உள்ள இப்பாலம் போதிய பராமரிப்பு இல்லாததால் விரிசல் ஏற்பட்டுள்ளது.
மாலை, மரியாதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மக்கள் நலனில் அக்கறை காட்டவில்லை. தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வரும் காட்பாடி ரயில்வே பாலத்தைச் சீரமைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக சென்னையில் உள்ள ரயில்வே துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசவுள்ளேன் என்றார் அவர்.
தொடர்ந்து, முழுக் கொள்ளளவை எட்டிய கழிஞ்சூர் ஏரியை துரைமுருகன் நேரில் பார்வையிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com