சாரதி மாளிகையை சீரமைக்கும் பணி தொடக்கம்

பழுதடைந்த வேலூர் சாரதி மாளிகை வணிக வளாகத்தை ரூ. 80 லட்சத்தில் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

பழுதடைந்த வேலூர் சாரதி மாளிகை வணிக வளாகத்தை ரூ. 80 லட்சத்தில் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
வேலூர் அண்ணா சாலையில் உள்ள சாரதி மாளிகை வணிக வளாகம் அப்போதைய முதல்வர் காமராஜரால் 1959-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1970-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-ஆம் தேதி திறக்கப்பட்டது. தரைதளம், முதல் தளம், இரண்டாம் தளத்தைக் கொண்ட இந்த வணிக வளாகத்தில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
வேலூரின் மிகப்பெரிய வணிக வளாகமான சாரதி மாளிகையில் ஆரம்ப கட்டத்தில் துணிக் கடைகள் அதிகம் கொண்டதாகவும், தற்போது எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் விற்பனை செய்யும் இடமாகவும் இருந்து வருகிறது.
மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த வணிக வளாகம், கட்டப்பட்டு 45 ஆண்டுகளுக்கு மேலாகி இருப்பதால் கட்டடத்தின் பல பகுதிகள் பழுதடைந்து காணப்படுகின்றன.
கடந்த ஆண்டு பெய்த மழையின் போது கட்டடத்தின் முன்பக்கத்தில் உள்ள போர்டிக்கோ இடிந்து விழுந்தது.
இதைத் தொடர்ந்து, கட்டடத்தை ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள், பழுதடைந்த கட்டடத்தை ரூ. 80 லட்சம் செலவில் சீரமைக்க முடிவு செய்து பொதுப் பணித் துறையிடம் ஒப்படைத்தனர்.
 இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ரூ. 80 லட்சம் செலவில் புதுப்பொலிவுடன் கட்டடத்தைச் சீரமைக்க பொதுப் பணித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இப்பணிகளை 3 மாதங்களுக்கு முடித்து தர அறிவுறுத்தப்பட்டிருப்பதால், சீரமைக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com