சிறுபான்மை மாணவர்கள் உருது மொழியில் தேர்வு எழுத நடவடிக்கை கோரி அமைச்சர் மனு

தமிழகத்தில் உருது பேசும் சிறுபான்மையின மாணவர்கள் தங்களது தேர்வுகளை உருது மொழியில் எழுத ஆவன செய்யக் கோரி சென்னை

தமிழகத்தில் உருது பேசும் சிறுபான்மையின மாணவர்கள் தங்களது தேர்வுகளை உருது மொழியில் எழுத ஆவன செய்யக் கோரி சென்னை தலைமை செயலகத்தில் மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம், தொழிலாளர் நலத் துறை அமைச்சரும், வாணிம்பாடி எம்எல்ஏவுமான நீலோபர் கபில் தலைமையில் கோரிக்கை மனு செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அமைச்சர் நீலோபர் கபில் கூறியதாவது:
உருது மொழியை தாய்மொழியாகக் கொண்ட இஸ்லாமிய மாணவ, மாணவிகள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தேர்வு எழுத சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் தேர்ச்சி சதவீதம் குறைந்து வருகிறது.
கடந்த ஆண்டுகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் உருது மொழியை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் அதே மொழியில் தேர்வு எழுதி வந்தனர். கடந்த திமுக ஆட்சியில் அது ரத்து செய்யப்பட்டது.
எனவே மீண்டும் மாணவர்கள் உருது மொழியில் தேர்வு எழுத ஆவன செய்யுமாறு அமைச்சரிடம் மனு அளித்துள்ளோம். அடுத்த கட்டமாக முதல்வரை நேரில் சந்தித்து அனுமதி கேட்க  உள்ளோம் என்றார்.
பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் இளங்கோவன், வாணியம்பாடி முஸ்லிம் சங்கம், ஆம்பூர் முஸ்லிம் கல்விச் சங்கம், மியாசி-சென்னை, மஜ்லிசுல் உல்மா, சி.அப்துல்ஹக்கீம் கல்லூரி, தன்சீம் ஜமாத் வாணியம்பாடி, ஹோபார்ட் முஸ்லிம் பள்ளி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com