ஜோலார்பேட்டை அருகே  தண்டவாளத்தில் விரிசல்: ரயில்கள் தாமதம்

ஜோலார்பேட்டை அருகே வியாழக்கிழமை தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால், ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

ஜோலார்பேட்டை அருகே வியாழக்கிழமை தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால், ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
ஜோலார்பேட்டை-கேத்தாண்டபட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள கல்லாறு அருகே ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை மார்க்கமாக செல்லும் தண்டவாளத்தில் வியாழக்கிழமை ஏற்பட்டிருந்த விரிசலை பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே ஊழியர்கள் கண்டறிந்தனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை மார்க்கமாகச் செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
இதைத் தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகள், ரயில் விபத்து தடுப்பு மற்றும் மீட்புக் குழுவினர் அங்கு சென்று தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, பெங்களூரு-சென்னை லால்பாக் விரைவு ரயில், மங்களூரு- காக்கிநாடா விரைவு ரயில், எர்ணாகுளம்-அத்தியா விரைவு ரயில், மதுரை-டேராடூன் விரைவு ரயில் உள்ளிட்ட ரயில்கள் நிறுத்தப்பட்டன.
தண்டவாள விரிசலை சரி செய்யும் பணி சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்றது. அதன் பின்னர், அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டன.
தொடர் மழையால் மண்அரிப்பு ஏற்பட்டு,  தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதாக ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர். விரிசல் உடனடியாகக் கண்டறியப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com