பிரம்மேஸ்வரர் கோயிலில் மகாலிங்க பிரதிஷ்டை உற்சவம்

அரக்கோணம் அருகே வேலூர்பாளையத்தில் மிகப் பழைமையான பிரம்மாம்பிகை உடனுறை பிரம்மேஸ்வரர் கோயிலில் சோமாஸ்கந்தர் மற்றும் மகாலிங்க பிரதிஷ்டை உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அரக்கோணம் அருகே வேலூர்பாளையத்தில் மிகப் பழைமையான பிரம்மாம்பிகை உடனுறை பிரம்மேஸ்வரர் கோயிலில் சோமாஸ்கந்தர் மற்றும் மகாலிங்க பிரதிஷ்டை உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1,166 ஆண்டுகள் பழைமையானதும் மூன்றாம் நந்திவர்ம பல்லவரால் கட்டப்பட்டதுமான பிரம்மாம்பிகை உடனுறை பிரம்மேஸ்வரர் கோயிலில் மகாலிங்க பிரதிஷ்டை உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது. முதலாவதாக மகாலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு அஷ்டபந்தனம் சாத்தப்பட்டது. தொடர்ந்து 11 கலசங்களால் கலசாபிஷேகம் செய்யப்பட்டு மகா அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றன. மாலையில் பாலாலயம் சக்தியை விண்ணில் கலக்கச் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சிகளுக்கு திருக்கழுகுன்றம் அகஸ்தியகிருபா அன்புசெழியன் முன்னிலை வகித்தார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை பிரம்மேஸ்வரர் அறக்கட்டளை நிர்வாகிகள் லட்சுமிபதி, கே.சுப்பிரமணி, எஸ்.சரவணன், ஒன்றிய திமுக நிர்வாகி கொள்ளாபுரி, மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com