சசிகலாவுக்கு வரவேற்பு: போக்குவரத்து பாதிப்பு

ஆம்பூரில் சசிகலாவுக்கு வியாழக்கிழமை அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். அவரைக் காண தொண்டர்கள் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆம்பூரில் சசிகலாவுக்கு வியாழக்கிழமை அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். அவரைக் காண தொண்டர்கள் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா, உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் தனது கணவர் நடராஜனை சந்திக்க 5 நாள்கள் பரோலில் விடுவிக்கப்பட்டார். பரோல் முடிந்த நிலையில், வியாழக்கிழமை சென்னையில் இருந்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு காரில் சென்றார். அப்போது, அவருக்கு வேலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆம்பூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே பிற்பகல் 1.40 மணிக்கு சசிகலாவின் கார் வந்தது.
அவருக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆம்பூர் எம்எல்ஏவும், அதிமுக (அம்மா அணி) வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளருமான ஆர்.பாலசுப்பிரமணி தலைமையில் நகரச் செயலாளர் ய.செ.சமரசன், மாதனூர் ஒன்றியச் செயலாளர் ஆர்.வெங்கடேசன் முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சசிகலாவை காண கூட்டம் அலைமோதியால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தைப் பார்த்த சசிகலா கண் கலங்கினார். இதையடுத்து 2 மணிக்கு ஆம்பூரில் அவரது இருந்து புறப்பட்டு சென்றது.
இதில், கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி, தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ பழனியப்பன், மாவட்டத் துணைச் செயலாளர் சக்கரபாணி, பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எம்.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சசிகலாவுக்கு வரவேற்பு கொடுக்க தொண்டர்கள் குவிந்ததால் தேசியநெடுஞ்சாலையில் அரைமணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து, கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சசிகலாவுக்கு வழியெங்கும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர். இதில் இருந்து தொண்டர்களும், மக்களும் யார் பக்கம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com