"நீர்ப் பாசனம்: சரியான முறைகளைக் கையாள வேண்டும்'

விவசாயத்துக்குத் தேவையான நீரை சேமித்து வைக்க விவசாயிகள் சரியான முறைகளைக் கையாள வேண்டும் என ஆட்சியர் எஸ்.ஏ. ராமன் கேட்டுக் கொண்டார்.

விவசாயத்துக்குத் தேவையான நீரை சேமித்து வைக்க விவசாயிகள் சரியான முறைகளைக் கையாள வேண்டும் என ஆட்சியர் எஸ்.ஏ. ராமன் கேட்டுக் கொண்டார்.
வாலாஜாபேட்டை வட்டம், ஜம்புகுளம் ஊராட்சியில் சோளிங்கர் வட்டார வேளாண்மைத் துறை சார்பில் கூட்டுப் பண்ணையம் குறித்து கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கருத்தரங்கை ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கு ரூ.11.49. லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:
இந்தக் கூட்டுப்பண்ணைத் திட்டம் என்பது ஒத்தக் கருத்துடைய விவசாயிகள் இணைந்து ஒரே வகையாக பயிடும் முறையாகும். விவசாயித்தைக் காக்க வேண்டியது அரசின் கடமையாகும்.  எனவே தான் அரசு விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களையும், உதவிகளையும் செய்து வருகிறது. விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்கு உயர்த்துவதற்கு மிக முக்கியமானது இயந்திரமயமாக்கல். புதிய தொழில்நுட்பத்தைக் கொண்ட விவசாய இயந்திரங்களைப் பயன்படுத்தினால் நேரமும், செலவும் குறையும். விவசாய மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களை விற்பனை செய்ய வேண்டும்.
வேலூர் மாவட்டத்தில் வேளாண் துறையின் கீழ் 340 கூட்டுப் பண்ணைக் குழுக்களும், 68 விற்பனைக் குழுக்களும், தோட்டக் கலை துறையின் கீழ் 150 கூட்டுப் பண்ணைக் குழுக்களும், 30 விற்பனைக் குழுக்களும் அமைக்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் இக்குழுக்களின் கூட்டம் நடத்தப்பட்டு,  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அதன்படி செயல்படுகின்றனவா என்று அரசு அலுவலர்களால் கண்காணிக்கப்படுகிறது.
விவசாயத்துக்குத் தேவையான நீரை சேமித்து வைக்க சரியான முறைகளைக் கையாள வேண்டும். விவசாயப் பொருள்களை சந்தைப்படுத்துதலில் உள்ள குறைகளைக் களைய வேண்டும்.
விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தைப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் இயற்கை இடர்பாடுகளான மழை, வெள்ளம் மற்றும் வறட்சி காலங்களில் விளைச்சல் பாதிக்கப்படும் போது காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து இழப்பீட்டு தொகை பெறலாம்.
மேலும், அரசு வழங்கும் மானியத்துடன் கூடிய விவசாயக் கடன்களைப் பெற்று சிறந்த முறையில் விவசாயம் செய்ய வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கு ரூ. 11.49 லட்சம் மானியத்துடன் கூடிய டிராக்டர், ரேட்டவேட்டர், சோலார் விளக்கு பொறி, மிளகாய் கன்றுகள், கத்தரி நாற்று உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் திருகுணஐயப்பதுரை, வேளாண் இணை இயக்குநர் வாசுதேவ ரெட்டி, அதிகாரிகள் சுப்புலட்சுமி, தாமேதரன், சத்தியமூர்த்தி,  ஞானசேகரன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com