விவசாயிகள் மகிழ்ச்சி

வாலாஜாபேட்டையை அடுத்த பாலாறு அணைக்கட்டில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

வாலாஜாபேட்டையை அடுத்த பாலாறு அணைக்கட்டில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம் போன்ற பாலாற்று பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பொன்னையாற்று வெள்ளநீர், திருவலம்  வழியாக விஷாரம் அருகே பாலாற்றில் கலப்பதால் அப்பகுதியில் பரவலாக வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது.
வாலாஜாபேட்டை அணைக்கட்டிற்கு வியாழக்கிழமை வந்த வெள்ளநீரை பொதுப் பணித் துறையினர் மதகுகளை மூடி பாலாற்றின் இருபுறமும் உள்ள பிரதான கால்வாய்கள் வழியாகத் திருப்பி விட்டனர். இதனால், காவேரிபாக்கம், மகேந்திரவாடி புதுப்பாடி, தூசி, மாமண்டூர் போன்ற ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதைப் பார்க்க மக்கள் ஆர்வத்துடன் அணைக்கட்டிற்கு வந்து செல்கின்றனர்.
கடந்த 2015 நவம்பர் மாதம் 15-ஆம் தேதிக்குப் பிறகு வாலாஜாபேட்டை அணைக்கட்டில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விவசாயம் செழிக்கும் என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இதற்கிடையே வெள்ளப் பெருக்கைப் பயன்படுத்தி, சிப்காட் பகுதியில் உள்ள பல்வேறு  ரசாயனம் மற்றும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேற்றப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com