பெண்களுக்கான தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்

தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், வேலூர் மாவட்ட சிறு, குறு தொழில் முனைவோர் சங்கம் சார்பில் பெண்களுக்கான தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்

தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், வேலூர் மாவட்ட சிறு, குறு தொழில் முனைவோர் சங்கம் சார்பில் பெண்களுக்கான தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் வாணியம்பாடி இசுலாமிய மகளிர் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு சங்கத் தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். வேலூர் மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர் மணிவண்ணன் முகாமைத் தொடங்கி வைத்து பேசியதாவது:
தொழில் முனைவோராக வேண்டுமானால் அதற்கான பயிற்சி பெற வேண்டும். என்ன தொழில் செய்ய வேண்டும் என முடிவு செய்து, அதற்கான நிதியை முதலீடு செய்ய வேண்டும். தொழில் குறித்து நுகர்வோருக்கு தெரியும் வகையில் சந்தைப்படுத்த வேண்டும். அப்போது தான் சிறந்த தொழில் முனைவோராக வெற்றி பெற முடியும்.
வேலையில்லா இளைஞகளுக்கு வேலைவாய்ப்பு ஊருவாக்கும் திட்டம், முதல் தலைமுறை தொழில் முனைவோரை உருவாக்கும் திட்டம், பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டங்களின் கீழ் புதிய தொழில் தொடங்க கடனுதவியும், அரசின் மானிய உதவியும் பெற்று பயனடையலாம் என்றார்.
வாணியம்பாடி தோல் தொழிலதிபர்கள் சங்கப் பொதுச் செயலாளர் முஹம்மத் முபீன் பேசியதாவது:
புதிய எண்ணங்களை வெளிக் கொணர்ந்து அதைச் செயல்படுத்துபவர்கள் தொழில் முனைவோர் ஆவார்கள். சவால்களை சமாளிப்பதில் பெண் தொழில் முனைவோர் முன்னிலையில் உள்ளனர்.
அவர்கள் எதிர்நோக்கு சிந்தனைக் கொண்டு, தொழிலையும், குடும்பத்தையும் சமமாக பாவித்து செயல்படுவார்கள். இதனால் தான் பெண் தொழில் முனைவோர் தொழில் துறையில் வெற்றியடைந்து வருகின்றனர். வாணியம்பாடியில் பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்றார்.
தொடர்ந்து, அரசால் வழங்கப்படும் மானியங்கள் குறித்து மாவட்ட தொழில் மையத்தைச் சேர்ந்த திட்ட மேலாளர் அசோகன், கல்லூரிச் செயலாளரும், தாளாளருமான அப்துல்ஹலீம், கல்லூரி முதல்வர் மருத்துவர் அக்தர் பேகம் உள்ளிட்டோர் பேசினர். வேளாண்மை அலுவலர் ஜீவானந்தம், தொழிலதிபர் ஹரிஹரன், மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் முஹம்மத் பாஷா அகியோர் பயிற்சி அளித்தனர். சங்கத் துணைத் தலைவர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com