அதிமுக 46-ஆம் ஆண்டு தொடக்க விழா

அதிமுக 46-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சோளிங்கர் பேருந்து நிலைய பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு, அதிமுக அம்மா அணி சார்பில், முன்னாள் எம்.பி. சி.கோபால் மாலை

அதிமுக 46-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சோளிங்கர் பேருந்து நிலைய பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு, அதிமுக அம்மா அணி சார்பில், முன்னாள் எம்.பி. சி.கோபால் மாலை அணிவித்தார்.
இதில் வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவுமான என்.ஜி.பார்த்தீபன், நிர்வாகிகள் ஆதம்பாஷா, சீனிவாசன், குப்பன் சுரேஷ் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் நாகராஜன் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காவேரிபாக்கத்தில்...
காவேரிபாக்கம் ஒன்றியம் அம்மா அணி சார்பில் பேரூராட்சி செயலாளர் குட்டி (எ) ரவி தலைமையில் காவேரிபாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
இதில், ஒன்றியச் செயலாளர் சிட்டிபாபு, நிர்வாகிகள் ஆடியபாதம்,கோதண்டம், பாபு, குமரேசன், பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டையில்...
ராணிப்பேட்டை நகர அதிமுக அம்மா அணி சார்பில் நடைபெற்ற விழாவுக்கு, நகரச் செயலாளர்
இ.தனசேகரன் தலைமை வகித்தார். வாலாஜாபேட்டை ஒன்றியச் செயலாளர் கஜேந்திரன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ எம்.எஸ்.சந்திரசேகர், முன்னாள் நகர் மன்றத் தலைவர் சற்குணம் சம்பத் ஆகியோர் மாந்தாங்கலில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
இதில், வாலாஜாபேட்டை நகரச் செயலாளர் சுரேஷ், நிர்வாகிகள் டி.ராமமூர்த்தி, எம்.நாகராஜ், கோவிந்தசாமி, ராஜசேகர், புகழேந்தி, ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆற்காட்டில்...
ஆற்காடு ஒன்றிய அதிமுக சார்பில் நடைபெற்ற விழாவுக்கு, ஒன்றியச் செயலாளர் எம்.குட்டி தலைமை வகித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
இதில், நிர்வாகிகள் எஸ்.ஆர்.சங்கர், என்.சாரதி வேல்முருகன், எம்.எஸ்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆம்பூரில்...
அதிமுக 46-ஆம் ஆண்டு தொடக்க விழா அகரம்சேரி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அதிமுக அம்மா அணி சார்பில் அகரம்சேரி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாதனூர் ஒன்றியச் செயலாளர் ஆர். வெங்கடேசன் தலைமை வகித்து எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நிர்வாகிகள் சின்னராஜி, சுப்பிரமணி, பிரபாகரன், சத்தியமூர்த்தி, சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com