தீபாவளி பொருள்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்

வேலூரில் தீபாவளி பண்டிகைக்கு பொருள்கள் வாங்க முக்கியப் பகுதிகளில் மக்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை அதிகளவில் காணப்பட்டது. இதற்கிடையில் திருட்டு சம்பவங்கள் நேரிடாமல் தடுக்க கண்காணிப்புப் பணியில்

வேலூரில் தீபாவளி பண்டிகைக்கு பொருள்கள் வாங்க முக்கியப் பகுதிகளில் மக்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை அதிகளவில் காணப்பட்டது. இதற்கிடையில் திருட்டு சம்பவங்கள் நேரிடாமல் தடுக்க கண்காணிப்புப் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே லாங்கு பஜார் பகுதியைச் சுற்றியுள்ள துணிக் கடைகள் மட்டுமல்லாது நேதாஜி மார்க்கெட்டில் தீபாவளி பண்டிகைக்குத் தேவையானப் பொருள்கள் வாங்குவதற்காக செவ்வாய்க்கிழமை காலை முதல் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
கூட்டத்தைப் பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உயர் கோபுரம் அமைத்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு மட்டுமன்றி, பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்றவைகளில் போலீஸார் கண்காணிப்புப் பணி செய்து வருகின்றனர்.
அதேபோல, பண்டிகை கொண்டாட்டத்துக்காக வெளியூர் செல்லும் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருப்பதால் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com