அண்ணா பிறந்தநாள் விழாக் கொண்டாட்டம்

வேலூர் மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு கட்சியினர் அண்ணா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு

வேலூர் மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு கட்சியினர் அண்ணா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
ஆம்பூர் நகர அதிமுக சார்பில் நகரச் செயலாளர் எம். மதியழகன் தலைமையில் அதிமுகவினர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் நஜர் முஹம்மத், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் சீனிவாசன், அமீன் பாஷா, கே. மணி, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆம்பூர் நகர திமுக சார்பில் பஜார் பகுதியில் இருந்து திமுகவினர் ஊர்வலமாகச் சென்றனர். ஆம்பூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு நகரச் செயலாளர் எம்.ஆர். ஆறுமுகம் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நிர்வாகிகள் இளங்கோவன், வில்வநாதன், ரபீக் அஹமத், ஆர்.எஸ். ஆனந்தன், ஏஜாஸ் அஹமத், நசீர் அஹமத் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
எம்ஜிஆர் கழகம் சார்பில் மாவட்டச் செயலாளர் ஆம்பூர் பெ. சிவகுமார் தலைமை வகித்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். நிர்வாகிகள் எம். மாணிக்கவேல், ஏ. மஜித்தான், எம்.பாட்னர் ரஹ்மான், என்.பெருமாள், ஐ. அயாஸ் அஹமத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாதனூர் ஒன்றிய அதிமுக சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு ஒன்றியச் செயலாளர் ஜோதிராமலிங்க ராஜா தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்தனர். முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சி. அன்பரசன், நிர்வாகிகள் சீனிவாசன், விஜயன், அசோக் மேத்தா, நாகராஜன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
குடியாத்தத்தில்...
 குடியாத்தம் நகர அதிமுகவினர் அலங்கரிக்கப்பட்ட அண்ணா உருவப் படத்துடன் ஊர்வலமாகச் சென்றனர். இதில், நகரச் செயலாளர் ஜே.கே.என். பழனி, அவைத் தலைவர் வி.என். தனஞ்செயன், துணைச் செயலாளர் ஆர். மூர்த்தி, நகர கூட்டுறவு வங்கித் தலைவர் எம். பாஸ்கர், நிர்வாகிகள் எஸ்.ஐ. அன்வர்பாஷா, ஆர்.கே. மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல, ஒன்றிய திமுகவினர் புதிய பேருந்து நிலையம் எதிரே அண்ணா பிறந்த நாளை கொண்டாடினர். வடக்கு ஒன்றியச் செயலாளர் கள்ளூர் கே. ரவி அலங்கரிக்கப்பட்ட அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்தார். மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் குமரன், தெற்கு ஒன்றியச் செயலாளர் டி. கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் கே. சேகர், என்.இ. சத்யானந்தம், ஜி.ஆர். கிருஷ்ணமூர்த்தி, ஜி.எஸ். அரசு, சாவித்திரி மணி, வி.ஆர். ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஒன்றிய அதிமுகவினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே அலங்கரிக்கப்பட்ட அண்ணா உருவப்படத்துக்கு எம்எல்ஏ ஜி.லோகநாதன் மாலை அணிவித்தார். முன்னாள் மாவட்டச் செயலாளர் வி.ராமு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். ஒன்றியச் செயலாளர் டி. சிவா, நிர்வாகிகள் என்.கே. ராஜாமணி, செ.கு.வெங்கடேசன், எம். நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதிமுக அம்மா அணி சார்பில் அக்கட்சியின் நகரச் செயலாளர் இ. நித்யானந்தம், அண்ணா உருவப் படத்துக்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலாளர் எம்.கே. பூபாலன், மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளர் வி.டி. சதீஷ்குமார், நிர்வாகிகள் வளத்தூர் எஸ்.ராமகிருஷ்ணன், எல்.ஏ.அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாணியம்பாடியில்...
வாணியம்பாடியை அடுத்த வெள்ளைக்குட்டையில் அண்ணா நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற விழாவில், அண்ணாவின் உருவப்படத்துக்கு நற்பணி மன்றத் தலைவர் மூர்த்தி, முன்னாள் ஊராட்சித் தலைவர் பலராமன், பாஜக நிர்வாகி சிவபிரகாசம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, ஒன்றிய பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் நிர்வாகிகள் தனஞ்செயன், ஆனந்தன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாட்டறம்பள்ளியில் ஒன்றிய, நகர அதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர் ராஜா அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நகரச் செயலாளர் ஞானசேகர், வழக்குரைஞர் ஸ்ரீதரன், முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினர் பிரேமலதா சாம்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல புதுபேட்டையில் அதிமுக சார்பில் ஜோலார்பேட்டை ஒன்றியச் செயலாளர் ரமேஷ் தலைமையில் கட்சி அலுவலகத்தில் அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
வாலாஜாபேட்டையில்...
வாலாஜாபேட்டை அதிமுக சார்பில் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள எம்ஜிஆர் சிலை அருகே அண்ணா உருவப்படத்துக்கு முன்னாள் மாவட்டச் செயலாளர் சி. ஏழுமலை தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில், நகரச் செயலாளர் மோகன், ஒன்றியச் செயலாளர் பூங்காவனம், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதிமுக (அம்மா) அணி சார்பில் வாலாஜாபேட்டை ஒன்றியச் செயலாளர் கஜேந்திரன் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிக்கப்பட்டது. இதில், அமைப்புச் செயலாளர் சி.கோபால் முன்னாள் எம்.பி. சந்திரசேகரன், நகரச் செயலாளர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சோளிங்கரில்...சோளிங்கரில் அதிமுக (அம்மா) அணி சார்பில் சோளிங்கர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா உருவப்
படத்துக்கு ஒன்றியச் செயலாளர் தலங்கை குப்பன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில் வழக்குரைஞர் தமிழ்ச்செல்வன், முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் வில்பர்ட் ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதேபோல, ரெண்டாடி ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
காவேரிபாக்கத்தில்... காவேரிபாக்கம் ஒன்றியச் செயலாளர் ராஜா தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
இதில், நிர்வாகிகள் தணிகாசலம், கோவிந்தசாமி, கரும்பாதை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காவேரிபாக்கத்தில் அதிமுக (அம்மா) அணி சார்பில் ஒன்றியச் செயலாளர் சிட்டிபாபு தலைமையில் பேரூராட்சி அலுவலகம் எதிரே அண்ணா உருவப் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
நகரச் செயலாளர் ரவி, முன்னாள் எம்எல்ஏ சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திமுக சார்பில் வாலாஜாபேட்டை தினசரி மார்க்கெட் எதிரே உள்ள அண்ணா சிலைக்கு ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆர்.காந்தி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. வாலாஜாபேட்டை ஒன்றியச் செயலாளர் சுந்தரம், நகரச் செயலாளர் புகழேந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டையில்...
வேலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ராணிப்பேட்டையை அடுத்த வி.சி.மோட்டூரில் உள்ள அண்ணா சிலைக்கு எம்எல்வும், வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளருமான ஆர்.காந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.இதில், ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் ஏ.கே. சுந்தரமூர்த்தி, வசந்தி ரவி, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் வி.சி.சக்திவேல் மற்றும் நகரச் செயலாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com