காவல் நிலையத்தில் மக்கிக் கிடக்கும் பறிமுதல் வாகனங்கள் ஏலம் விடப்படுமா?

பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, மக்கிக் கிடக்கும் வாகனங்களை ஏலம் விட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, மக்கிக் கிடக்கும் வாகனங்களை ஏலம் விட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதட்டூர்பேட்டையில் கடந்த 2015 -இல் காவல் நிலையம் தொடங்கப்பட்டது. இந்த காவல் நிலைய கட்டுப்பாட்டில் 28 கிராமங்கள் உள்ளன. இந்நிலையில், விபத்து, செம்மரக்கட்டைகள் கடத்தல், முறையான ஆவணமின்றி சென்ற லாரி, கார், பைக், ஆட்டோ போன்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த வாகனங்கள் கடந்த 2 ஆண்டுகளாக வெயிலிலும், மழையிலும் கிடப்பதால், துருப்பிடித்து மக்கி வருகின்றன.
வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடத்தில் முள்செடிகள் வளர்ந்து, புதர்மண்டி கிடக்கின்றன. இங்கு பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களும் நடமாடுகின்றன.
இப்பகுதியின் அருகே குடியிருப்புகள் உள்ளதால், விஷ ஜந்துக்கள் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. சில நேரங்களில் காவல் நிலையத்துக்குள்ளும் புகுந்து போலீஸாரை அச்சுறுத்துகின்றன.
பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் வீணாகக் கிடக்கும் வாகனங்களை ஏலம் விட்டால் அரசுக்கு வருவாய் கிடைக்கும். எனவே, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம்விட்டு, முள்புதர்களை சுத்தம் செய்யவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com