கே.எம்.ஜி. கல்லூரிக்கு தேசிய தர நிர்ணய மதிப்பீட்டுக் குழு வருகை

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரிக்கு தேசிய தர நிர்ணய மதிப்பீட்டுக் குழு வருகை தர உள்ளது.

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரிக்கு தேசிய தர நிர்ணய மதிப்பீட்டுக் குழு வருகை தர உள்ளது.
இதுதொடர்பாக கல்லூரியின் முதல்வர் எம். ஜெயஸ்ரீராணி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரி 2000-ஆம் ஆண்டு முதல் கல்விப் பணி ஆற்றி வருகிறது. இக்கல்வி நிறுவனத்தை தர மதிப்பீடு செய்து, தர நிர்ணயம் வழங்க, தேசிய தர மதிப்பீட்டு தர நிர்ணயக் கழகம் செப்டம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் கல்லூரிக்கு வர உள்ளது. இக்குழுவில் மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
கே.எம்.ஜி. கல்லூரி 2000-ஆம் ஆண்டு 5 இளநிலை பாடப் பிரிவுகளுடன் தொடங்கப்பட்டது. தற்போது இக்கல்லூரியில் 10 இளநிலைப் பாடப் பிரிவுகள், 8 முதுநிலைப் பாடப் பிரிவுகள், 5 ஆய்வியல் நிறைஞர் பாடப் பிரிவுகள், ஒரு முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பு என 24 பாடப் பிரிவுகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இக்கல்லூரியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com