சோளிங்கர் மலையில் இருந்து ஊர்க் கோயிலுக்கு வந்த அமிர்தவல்லி தாயார்

சோளிங்கர் மலையில் அருள்பாலிக்கும் அமிர்தவல்லி தாயார் பக்தர்களின் வசதிக்காக சனிக்கிழமை ஊர்க் கோயிலை வந்தடைந்தார்.

சோளிங்கர் மலையில் அருள்பாலிக்கும் அமிர்தவல்லி தாயார் பக்தர்களின் வசதிக்காக சனிக்கிழமை ஊர்க் கோயிலை வந்தடைந்தார்.
108 திவ்ய தரிசன வைணவ தலங்களில் ஒன்றாக விளங்கும் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயிலில் அமிர்தவல்லி தாயாரை மலை மீது ஏறிச்சென்று வழிபடுவது இங்கு வரும் பக்தர்களின் வழக்கம்.
மேலும் மலை மீது ஏறிச் செல்ல இயலாதவர்கள் வழிபடும் வகையில், அமிர்தவல்லி தாயார் ஆண்டுதோறும் 2 மாதங்களுக்கு மலைக் கோயிலில் இருந்து ஊர்க் கோயிலுக்கு வந்து அருள்
பாலிப்பது வழக்கம்.
அதன்படி, இந்தாண்டு சனிக்கிழமை மலையில் இருந்து அமிர்தவல்லி தாயார் ஊர்க் கோயிலை வந்தடைந்தார். வரும் நவம்பர் 15-ஆம் தேதி வரை இக்கோயிலில் தாயார் அருள்பாலிப்பார். இதனால் பக்தர்கள் நாள்தோறும் கோயிலுக்குச் சென்று தாயாரை 108 முறை வலம் வந்து வழிபடுவர்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com