தென்னை விவசாயிகளுக்கு செயல் விளக்கப் பயிற்சி

செலவைக் குறைத்து, உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் தென்னை விவசாயிகளுக்கு திங்கள்கிழமை பண்ணை செயல் விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.

செலவைக் குறைத்து, உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் தென்னை விவசாயிகளுக்கு திங்கள்கிழமை பண்ணை செயல் விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.
 மத்திய அரசின், சென்னை மண்டல தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில், குடியாத்தத்தை அடுத்த மேல்ஆலத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தென்னை உற்பத்தியாளர், விவசாய நலக்குழு குடியாத்தம் அமைப்பின் தலைவர் என்.ஆர். தாஜுதீன் தலைமை வகித்தார். தென்னை வளர்ச்சி வாரிய இயக்குநர் ராஜீவ்பூஷன், திட்ட அலுவலர் பரமசிவம் ஆகியோர் தென்னை விவசாயிகளுக்கு செயல் விளக்கப் பயிற்சி அளித்தனர். பயிற்சிக்குப்பின் தென்னையைத் தாக்கும் பூச்சிகளைக்  கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும்,  தென்னை சாகுபடி குறித்த நவீன தொழில்நுட்பங்கள் குறித்தும், விவசாயிகளின் 
சந்தேகங்களுக்கும் பயிற்சியாளர்கள் விளக்கம் அளித்தனர். 
நவீன தொழில்நுட்பத்தில் தென்னை சாகுபடி செய்வது குறித்தும், தென்னை மரங்களுக்கு இடுபொருள்கள் இடும் முறை குறித்தும் செயல் விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். 
மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் மூலம், வேலூர் மாவட்டத்தில் 170 ஹெக்டேர் நிலத்தில் தென்னை பயிரிடப்படுகிறது. 219 முன்னோடி தென்னை விவசாயிகள் இத்திட்டத்தில் தென்னையை பயிரிடுகின்றனர். அவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ. 17,500 வீதம், 2 ஆண்டுகளுக்கு ரூ. 35 ஆயிரம் மதிப்புள்ள இடுபொருள்கள் இலவசமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com