வேப்பூர் வசிஷ்டேஸ்வரர் கோயிலில் சண்டி யாகம்

ஆற்காட்டை அடுத்த வேப்பூர் பாலமுகுசம்பிகை சமேத வசிஷ்டேஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை சண்டி யாகாம் நடைபெற்றது.

ஆற்காட்டை அடுத்த வேப்பூர் பாலமுகுசம்பிகை சமேத வசிஷ்டேஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை சண்டி யாகாம் நடைபெற்றது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு, உலக நன்மைக்காவும், நாட்டில் மழைவளம் வேண்டியும், பக்தர்களின் குறைகள் களைய வேண்டியும் நடைபெற்ற சண்டி யாகத்துக்கு திருவலம் சர்வ மங்களா பீடாதிபதி சாந்தா சுவாமிகள் தலைமை வகித்தார். யாக பூஜையை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், கோபூஜை, சதுஷ்சஷ்டி பைரவ யோகினி பலி பூஜை, கலச ஸ்தாபனம், ஆவரண பூஜை ஆகியன நடைபெற்றன. 
இதைத் தொடர்ந்து, சண்டி யாகம் தொடங்கப்பட்டு ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் செளபக்கிய மகா பூர்ணா ஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றன. இந்த யாக பூஜையில் திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com