கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரைவை தொடக்கம்

வாணியம்பாடியை அடுத்த கேத்தாண்டப்பட்டியில் இயங்கி வரும் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில்

வாணியம்பாடியை அடுத்த கேத்தாண்டப்பட்டியில் இயங்கி வரும் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2018-19-ஆம் ஆண்டுக்கான கரும்பு அரைவை தொடக்கத்துக்கான பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், தனி அலுவலர் ராஜேந்திரன், நிர்வாகக் குழுத் தலைவர் ராஜேந்திரன், நாட்டறம்பள்ளி வட்டாட்சியர் குமார், துணைத் தலைவர் செல்வம்,  நிர்வாகக் குழு உறுப்பினர் சதீஷ்குமார், விவசாய சங்கப் பிரதிநிதிகள் தனபால், முல்லை, முத்துகிருஷ்ணன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி குத்துவிளக்கு ஏற்றி பூஜை நடத்தி அரைவையைத் தொடங்கி வைத்தார். நிர்வாகக் குழு உறுப்பினர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், ஆலைத் தொழிலாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
80 ஆயிரம் டன் அரைவை இலக்கு: 2018-19-ஆம் ஆண்டின் அரைவை பருவத்தில் மொத்தம் 80 ஆயிரம் டன் கரும்பு அரைவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கரும்பு அபிவிருத்தி அலுவலர் விஜயகுமார், கரும்பு அலுவலர்கள் வெற்றிவேந்தன், கணபதி, சந்திரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com