சிறப்பு மக்கள் நீதிமன்றம்மாவட்டத்தில் ஒரே நாளில் 5,345 வழக்குகளுக்கு தீர்வு

வேலூர் மாவட்டம் முழுவதும் நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றங்களில் நீண்ட நாள் நிலுவையிலுள்ள 5,345 வழக்குகளுக்கு ஒ


வேலூர் மாவட்டம் முழுவதும் நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றங்களில் நீண்ட நாள் நிலுவையிலுள்ள 5,345 வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டதுடன், பயனாளிகளுக்கு ரூ. 17.34 கோடி நிதி பெற்றுத் தரப்பட்டது.
வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 11 நீதிமன்றங்களிலும் சிறப்பு மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வாகன விபத்து, வங்கி வாராக் கடன், காசோலை மோசடி, தொழிலாளர் நல வழக்கு, நில ஆர்ஜித வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காண்பதற்காக இந்த மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது.
இதில், மாவட்டம் முழுவதும் 12,729 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் 5,345 வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டன. அதன்மூலம் ரூ. 17 கோடியே 34 லட்சத்து 17 ஆயிரத்து 570 தொகை பயனாளிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது.
முன்னதாக, வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.ஆனந்தி தலைமை வகித்து தீர்வு காணப்பட்ட வழக்குகளில் பயனாளிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை அளித்தார். இதில், கூடுதல் மாவட்ட நீதிபதி எம்.வெற்றிச்செல்வி, மகளிர் நீதிமன்ற நீதிபதி செல்வம், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலர் தாமோதரன், கூடுதல் சார்பு நீதிபதி ராஜசிம்மவர்மன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி அருண்குமார், வழக்குரைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஆம்பூரில்
629 வழக்குகளுக்கு தீர்வு...
 ஆம்பூர் நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 629 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதி ஏ. கதிரவன், குற்றவியல் நீதித் துறை நடுவர் ஜி. ரூபனா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், 629 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டு, ரூ. 30.50 லட்சம் வசூலிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com