வரும் காலங்களில் அனைத்து துறைகளிலும் உயிர் தொழில்நுட்பம் மிக முக்கிய பங்கு வகிக்கும்: துணை வேந்தர் க.முருகன்

இனிவரும் காலங்களில் மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உயிர் தொழில்நுட்பம் (பயோ டெக்னாலஜி) மிக முக்கியமான

இனிவரும் காலங்களில் மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உயிர் தொழில்நுட்பம் (பயோ டெக்னாலஜி) மிக முக்கியமான பங்கு வகிக்கும் என்று திருவள்ளுவர் பல்கலைக்கழகத் துணை வேந்தர் க.முருகன் பேசினார்.
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக உயிர் தொழில்நுட்பவியல் துறை மற்றும் கரக்பூர் ஐஐடி ஆகியன இணைந்து மூலக்கூறு உயிரியலில் அடிப்படை நுட்பங்கள் குறித்த பயிலரங்கம் செவ்வாய் மற்றும் புதன் ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது.
இப்பயிலரங்கைத் தொடக்கி வைத்து துணைவேந்தர் கா.முருகன் பேசியதாவது:
பல்கலைக்கழகம் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் அறிவியல் உள்ளிட்ட அனைத்து துறை மாணவர்களும் அந்தந்த துறை சார்ந்த அடிப்படை அறிவைப் பெறுவது மிக அவசியம். அதிலும் குறிப்பாக அறிவியியல், வேதியியல், உயிரியியல் ஆகிய துறை மாணவர்கள் அனைவருக்கும் கண்டிப்பாக அடிப்படை அறிவியில் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் அடிப்படை அறிவியில் தெரியாமல் ஆராய்ச்சி கல்வியில் வெற்றி பெற முடியாது. அவற்றில் மிக முக்கியமாக நாட்டின் பல்லுயிர் பெருக்கம், இயற்கை வளங்கள் குறித்து அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இனி வருங்காலங்களில் மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உயிர் தொழில்நுட்பம் மிக முக்கியமான பங்கு வகிக்கும் என்றார் அவர்.
தொடர்ந்து பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) வெ.பெருவழுதி வாழ்த்துரை வழங்கினார். இப்பயிரங்கில் கரக்பூர் ஐஐடி முதுநிலைப் பேராசிரியர் பிரசாந்தா உயிரி தொழில்நுட்பவியல் துறையில் மூலக்கூறு உயிரியலில் அடிப்படை நுட்பங்கள் குறித்து பயிற்சி அளித்தார். 
இதில், பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பவியல் துறைத் தலைவர் எர்னஸ்ட் டேவிட், இணைப் போராசிரியர் பாபு ஜனார்த்தனம், உதவிப் போராசிரியர்கள் அ.ராஜசேகர், விஜய் ஆனந்த், அரிஷ் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகள், புதுச்சேரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியல்  மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com