நாளை ஸ்ரீபுரம் கோயிலில் சொர்ணலட்சுமி சந்நிதி கும்பாபிஷேகம்

ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் சொர்ணலட்சுமி சிலை பிரதிஷ்டை, கும்பாபிஷேகம் திங்கள்கிழமை (பிப்ரவரி 26) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் சொர்ணலட்சுமி சிலை பிரதிஷ்டை, கும்பாபிஷேகம் திங்கள்கிழமை (பிப்ரவரி 26) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
வேலூர் மாவட்டம், ஸ்ரீபுரம் தங்கக் கோயில் எனும் நாராயணி பீடத்தில் 70 கிலோ தங்கத்தில் சொர்ணலட்சுமி சிலை உள்ளது. இச்சிலைக்கென இதுவரை தனியாக சந்நிதி இல்லாமல் இருந்தது. தற்போது கோயில் வளாகத்தில் புதியதாக சந்நிதி அமைக்கப்பட்டு அதில் சொர்ணலட்சுமி சிலை பிரதிஷ்டை, கும்பாபிஷேகம் திங்கள்கிழமை (பிப்ரவரி 26) நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை நாராயணி பீடத்தின் பீடாதிபதி சக்தி அம்மா நடத்த உள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் சனிக்கிழமை சக்தி அம்மா கூறியதாவது:
ஸ்ரீபுரத்திலுள்ள நாராயணி பீட தங்கக் கோயில் கடந்த 2006-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, 2016-ஆம் ஆண்டு ஸ்ரீநிவாச பெருமாளுக்கு தனியாக சந்நிதி அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதன்தொடர்ச்சியாக, கோயில் வளாகத்தில் சொர்ணலட்சுமிக்கு என தனியாக சந்நிதி அமைக்கப்பட்டு திங்கள்கிழமை காலை கும்பாபிஷேகம் செய்யப்பட உள்ளது.
இதையொட்டி, கோயிலில் உள்ள 70 கிலோ தங்கத்தினாலான சொர்ணலட்சுமி சிலை கடந்த ஒரு மாதமாக வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கரிகோல ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை காலை யாக பூஜைகள் நிறைவு செய்யப்பட்டு, காலை 10.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். சொர்ணலட்சுமிக்கு சிலைக்கு கடந்த 23-ஆம் தேதி முதல் பக்தர்களே அபிஷேகம், பூஜைகள் செய்திடவும் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இந்த கும்பாபிஷேக விழாவில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com