"எருது விடும் திருவிழா: நடவடிக்கைகள் தீவிரம்'

வேலூர் மாவட்டத்தில் எருது விடும் திருவிழாவுக்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டத்தில் எருது விடும் திருவிழாவுக்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்தார்.
2018-ஆம் ஆண்டில் மாவட்டத்தில் எருது விடும் திருவிழா நடத்துவது குறித்து அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் விழாக் குழுவினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமையில் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் பேசியதாவது:
மாவட்டத்தில் பாரம்பரிய திருவிழாக்கள், பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் நடைபெறும் எருது விடும் திருவிழா சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் அரசு வகுத்துள்ள நெறிமுறைகளின்படி நடத்த அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
இதில், மாவட்ட எஸ்.பி. பகலவன், ஏடிஎஸ்பி அதிவீரப்பாண்டியன், திருப்பத்தூர் சார்-ஆட்சியர் கார்த்திகேயன், வருவாய் கோட்டாட்சியர்கள், டி.எஸ்.பி.க்கள், வட்டாட்சியர்கள், அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com