தற்கொலை செய்த 4 மாணவிகளின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி: தமிழக அரசு வழங்கியது

காவேரிபாக்கம் அருகே பனப்பாக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவிகள் 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரண நிதி புதன்கிழமை வழங்கப்பட்டது.

காவேரிபாக்கம் அருகே பனப்பாக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவிகள் 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரண நிதி புதன்கிழமை வழங்கப்பட்டது.
வேலூர் மாவட்டம், காவேரிபாக்கத்தை அடுத்த பனப்பாக்கம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த ரேவதி (16), சங்கரி (16), தீபா (16), மனீஷா (16) ஆகிய 4 மாணவிகள் வகுப்பாசிரியை திட்டியதாகக் கூறி கடந்த நவம்பர் 24-ஆம் தேதி விவசாயக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இதையடுத்து, அப்பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் வகுப்பு ஆசிரியை ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட மாணவிகளின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதன்படி, 4 மாணவிகளின் பெற்றோர்களிடம் தலா ரூ. 2 லட்சத்துக்கான காசோலையை ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் வேணுசேகரன் புதன்கிழமை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com