பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வுக் கருத்தரங்கம்

திருப்பத்தூரில்  உள்ள மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் "படிப்பில் சுட்டி-தேர்வில் வெற்றி' என்ற விழிப்புணர்வுக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூரில்  உள்ள மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் "படிப்பில் சுட்டி-தேர்வில் வெற்றி' என்ற விழிப்புணர்வுக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை க.செல்வி தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர் சி.குணசேகரன் வரவேற்றார். தன்னம்பிக்கை பயிற்சியாளர் பரமன் பச்சைமுத்து பேசியதாவது: 
மாணவர்கள் பாடத்தை தொடர்ந்து படிக்க வேண்டும். ஆனால், 45 நிமிடங்களுக்கு ஒருமுறை அடுத்தடுத்த பாடத்தைப் படிக்க வேண்டும். இடையில் 10 நிமிடங்கள் ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும். படிப்பது 3 வகை. படித்தறிவது, கேட்டறிவது, எழுதியறிவது. மாணவர்கள் தங்களுக்கு எது எளிமையாக உள்ளதென தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜி.ஆர்.சாமி செட்டி, எம்.மதியழகன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com