நடைப்பயணமாக திருத்தணி புறப்பட்ட முருக பக்தர்கள்
By DIN | Published on : 14th January 2018 12:30 AM | அ+அ அ- |
அரக்கோணம் முருகனடியார் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான முருக பக்தர்கள் 41-ஆவது ஆண்டாக திருத்தணி முருகன் கோயிலுக்கு நடைப்பயணமாக சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றனர்.
அரக்கோணத்தைச் சேர்ந்த முருகனடியார் சங்கத்தினர் ஒவ்வொரு ஆண்டும் மாலையணிந்து போகிப் பண்டிகை தினத்தில் திருத்தணிக்கு நடைப் பயணமாகச் செல்வது வழக்கம். அதன்படி 41-ஆவது ஆண்டாக சனிக்கிழமை, நூற்றுக்கணக்கானோர் சுவால்பேட்டை சுந்தர விநாயகர் கோயிலில் இருந்து நடைப்பயணமாக திருத்தணிக்குப் புறப்பட்டனர்.
சனிக்கிழமை இரவு திருத்தணி மலைக் கோயிலிலேயே தங்கும் இவர்கள் பொங்கல் தினமான தை முதல் நாளில் முதல் தரிசனமாக முருகனை தரிசிக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை அரக்கோணம் முருகனடியார் சங்கத்தினர் செய்துள்ளனர்.