கலைத் திருவிழாவில் வென்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு

பள்ளிக் கலைத் திருவிழாவில் பங்கேற்று வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வழங்கினார்.

பள்ளிக் கலைத் திருவிழாவில் பங்கேற்று வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வழங்கினார்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் "கலையருவி' என்ற பெயரில் பள்ளிக் கலைத் திருவிழா நடப்புக் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், மொழியாற்றல், பாரம்பரியம், செவ்வியல், நவீனம், ஆன்மிகம், கலாசாரம், கிராமியம், நாட்டுப்புறம் ஆகிய பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் 1-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவர்களின் தனித்திறன்கள் வெளிக்கொணர வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, வேலூர் மாவட்டத்தில் இந்தக் கலைத் திருவிழா திருப்பத்தூர், வேலூர் ஆகிய இரு கல்வி மாவட்ட அளவில் நடத்தப்பட்டன. இவற்றில் 2,700 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது தனித்திறனை வெளிப்படுத்தினர். இந்த இரு கல்வி மாவட்டங்களிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமை வகித்து போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழை வழங்கிப் பேசியதாவது:
பள்ளி மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் நடப்புக் கல்வியாண்டு முதல் இந்த கலைத் திருவிழா நடத்தப்படுகிறது. இதில், பங்கேற்று மாணவர்கள் தங்களது தனித்திறனை வெளிக்கொண்டு வருவது பெருமைக்குரிய செயலாகும்.
மாணவர்கள் கல்வி கற்பதோடு நின்றுவிடாமல் தங்களிடம் மறைந்துள்ள திறன்களையும் வெளிக்காட்டிட வேண்டும். அவ்வாறு மாணவர்களின் பல்வேறு திறன்களை வெளி கொண்டுவர தமிழக அரசு வழிவகை செய்துள்ளது என்றார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சா.மார்ஸ் வரவேற்றார். மாவட்டக் கல்வி அலுவலர்கள் என்.சாம்பசிவம் (திருப்பத்தூர்), சி.அமுதா (வேலூர்), மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் கு.குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com