பொழுதுபோக்கு அம்சங்களுடன் அரசுப் பொருள்காட்சி: வேலூரில் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

வேலூரில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அரசுப் பொருள்காட்சியை மாநில செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி,

வேலூரில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அரசுப் பொருள்காட்சியை மாநில செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நீலோபர் கபில் ஆகியோர் சனிக்கிழமை தொடங்கி வைத்தனர்.
தமிழக அரசின் திட்டங்கள், சாதனைகளை மக்களுக்கு விளக்கும் வகையில் மாவட்ட அளவில் அரசுப் பொருள்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அரசுப் பொருள்காட்சி வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சாய்சிட்டி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், தமிழக அரசின் 27 துறைகளின் திட்டங்கள் குறித்தும், சாதனைகள் குறித்தும் மக்களிடையே விளக்கும் வகையில் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, அரசு சாரா 10 நிறுவனங்களின் கண்காட்சி அரங்குகளும் உள்ளன. அவற்றில் வீட்டு உபயோகப் பொருள்கள், குழந்தைகளுக்கான கல்வி, விளையாட்டு உபகரணங்கள் போன்றவையும் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், சிறுவர், பெரியவர்களுக்கான பொழுது அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பொருள்காட்சியை அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, கே.சி.வீரமணி, நீலோபர் கபில் ஆகியோர் சனிக்கிழமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர்.
ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வரவேற்றார். செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் பொ.சங்கர் நன்றி கூறினார்.
இதில், வேலூர், திருவண்ணாமலை, அரக்கோணம் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். இந்தப் பொருள்காட்சி தொடர்ந்து 45 நாள்கள் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com