அமிர்தி அருவியில் பாதுகாப்பாக குளிக்க தடுப்புகள் அமைப்பு: வனத்துறை அதிகாரிகள் ஆய்வு

அமிர்தி அருவியில் பொதுமக்கள் பாதுகாப்பாக குளிக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதை வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அமிர்தி அருவியில் பாதுகாப்பாக குளிக்க தடுப்புகள் அமைப்பு: வனத்துறை அதிகாரிகள் ஆய்வு

அமிர்தி அருவியில் பொதுமக்கள் பாதுகாப்பாக குளிக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதை வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

வேலூரை அடுத்த அமிர்தியில் வனத்துறை சார்பில் வனஉயிரின பூங்கா அமைந்துள்ளது. சுற்றுலா தலமான இங்கு பல்வேறு வகையான வன விலங்குகள், உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள கொட்டாறு நீர்வீழ்ச்சியில் மழைக்காலத்தின்போது அதிக அளவில் தண்ணீர் கொட்டுவது வழக்கம். அதில், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்வர். 
இதனிடையே, கொட்டாறு நீர் வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டும் சமயங்களில் பெண்கள், சிறுவர்கள் பாதுகாப்பாக குளிக்க முடியாத நிலை உள்ளது.

இதையடுத்து, அருவியில் சிறுவர்கள் ஆனந்தமாக  குளித்து மகிழ வசதியாக சிமெண்ட் தரைகள், தடுப்புகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கொட்டாறு நீர்வீழ்ச்சியை வனச்சரகர் ராஜா தலைமையிலான வனத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து அருவியில் விரைவில் தடுப்புகள், சிமெண்ட் தரை தளங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வனத்துறை அலுவலர்கள் கூறியதாவது:
சில மாதங்களுக்கு முன் தேனி மாவட்டம், குரங்கணி மலையில் நடந்த தீ விபத்துக்குப் பிறகு கொட்டாறு நீர்வீழ்ச்சிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த தடை நீங்கி நீர்வீழ்ச்சிக்கு பயணிகள் செல்ல மீண்டும் அனுமதி வழங்கினால், அவர்கள் எவ்வாறு பாதுகாப்பாக நீர்வீழ்ச்சியைக் கண்டு ரசிப்பது என்பது ஆய்வு செய்யப்பட்டது. மேலும், அருவியில் பாதுகாப்பாக பெண்கள், சிறுவர்கள் நின்று குளிக்கும் வகையில் தடுப்புகள் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. விரைவில் கொட்டாறு அருவியில் தடுப்புகள், சிமெண்ட் தரை தளங்கள் அமைக்கப்படும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com